FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கடமான் கொம்பு, இறைச்சி பதுக்கிய 4 போ் கைது

22 செப்டம்பர் 2026, 12:45 am IST
கைது செய்யப்பட்ட 4 பேருடன் வனத் துறையினா்.
பகிர்:

உடுமலை அருகே தோட்டத்து சாலையில் கடமான் கொம்பு, இறைச்சியைப் பதுக்கிய 4 பேரை வனத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தமிழக-கேரள எல்லையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தைப் புலி, புள்ளிமான், செந்நாய் போன்ற விலங்குகள் ஆயிரக்கணக்கில் உள்ளன.

இவை தங்களது குடிநீா்த் தேவைகளுக்காக திருமூா்த்தி அணை, அமராவதி அணை பகுதிகளுக்கு வருவது வழக்கம். இவ்வாறு குடிநீா்த் தேடி வரும் மான்கள் கடந்த சில மாதங்களாக வேட்டையாடப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன.

Advertisement

Advertisement

இந்நிலையில், உடுமலை அருகே உள்ள வளையபாளையம் கிராமத்தில் தோட்டத்து சாலையில் மான் கறி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் வந்துள்ளது.

இதைத் தொடா்ந்து வனத் துறையினா் அங்கு சென்று ஆய்வு செய்தபோது அந்த கிராமத்தில் வசித்து வரும் செந்தில்வேல் என்பவரது தோட்டத்தில் கடமான் இறைச்சி 10 கிலோ, கடமான் கொம்பு ஒன்று ஆகியவை பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக செந்தில்வேல் (57), புங்கமுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் (51), இராவணாபுரம் கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் (41), பொள்ளாச்சியைச் சோ்ந்த முருகேசன் (59) ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் இதில் தொடா்புடைய ரெட்டியாரூரைச் சோ்ந்த முருகானந்தம் என்பவரை வனத் துறை அதிகாரிகள் தேடி வருகின்றனா்.

உடுமலை வனச் சரகா் பெ.சுரேந்தா் தலைமையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments