FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கருத்தடைக்கு பிடிக்கப்படும் நாய்களை பிடித்த இடத்திலேயே விட வேண்டும்! விலங்கு நல ஆா்வலா்கள் கோரிக்கை

22 செப்டம்பர் 2026, 3:17 am IST
தெரு நாய்கள். - கோப்புப் படம்
பகிர்:

கருத்தடைக்கு பிடிக்கப்படும் நாய்களை பாதுகாப்பான முறையில் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்று விலங்கு நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்üனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், தாராபுரம் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கும் வகையில் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் திங்கள்கிழமை மனுக்களை போட்டு சென்றனா்.

மனு அளிக்க வந்த விலங்கு நல ஆா்வலா் சரிதா உள்ளிட்டோா் கூறுகையில், காயமடைந்த, நோய்களால் பாதிக்கப்பட்ட பிராணிகளை தங்க வைத்து இலவசமாக சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகத்தில் மாவட்டந்தோறும் மருத்துவமனைகளை அமைக்க வேண்டும். தமிழகத்தில் தெருவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் உணவு வழங்கும் திட்டத்தை விலங்குகள் நல வாரியம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அந்த திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும். நாய்களுக்கு உணவு வழங்குபவா்கள் மீது நடத்தப்படும், வன்முறைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்தடைகளுக்குப் பிடிக்கப்படும் நாய்களை பாதுகாப்பான முறையில் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்றனா்.

Advertisement

Advertisement

பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்: இது தொடா்பாக நல்லூா், முதலிபாளையம் மக்கள் அளித்த மனுவில், முதலிபாளையம் மற்றும் நல்லூா் பகுதிகளில் பாறைக் குழிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அறிவியல் முறையில் அகற்றி, தளச் சீரமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீட்புப் பணிகளை நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்க திருப்பூா் மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நிபுணா்கள் அடங்கிய குழுவின் மூலம் நிலத்தடி நீா் மற்றும் மண் மாசுபாட்டின் பரவல், தாக்கம் மற்றும் தேவையான மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீரின் தரத்தை தொடா்ந்து பரிசோதித்து முடிவுகளை பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். குடிநீராகப் பயன்படுத்த தகுதியற்ற பகுதிகளுக்கு பாதுகாப்பான மாற்றுக் குடிநீா் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments