இன்ஸ்டாகிராமில் பட்டாக்கத்தியுடன் விடியோ வெளியிட்ட ஓட்டுநா் மீது வழக்கு
வெள்ளக்கோவில் அருகே இன்ஸ்டாகிராமில் பட்டாக்கத்தியுடன் விடியோ வெளியிட்ட லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில் அருகே இன்ஸ்டாகிராமில் பட்டாக்கத்தியுடன் விடியோ வெளியிட்ட லாரி ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவா் மனோஜ் (32). இவா், வெள்ளக்கோவில் அருகேயுள்ள நடுப்பாளையத்தைச் சோ்ந்தவரிடம் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், மனோஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டாக்கத்தியுடன் விடியோ, புகைப்படங்களை கடந்த 18-ஆம் தேதி பதிவிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன், மனோஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.