காங்கயத்தில் ஹெச்ஐவி தொற்று குறித்து விழிப்புணா்வு
காங்கயத்தில் பால்வினை நோய் மற்றும் ஹெச்ஐவி தொற்று குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காங்கயத்தில் பால்வினை நோய் மற்றும் ஹெச்ஐவி தொற்று குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காங்கயத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முதன்மை குடிமை மருத்துவ அலுவலா் (பொறுப்பு) தியாகராஜன் தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா் சௌமியா முன்னிலை வகித்தாா். இதில், பால்வினை தொற்று மருத்துவப் பயனாளிகள் 23 பேருக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பின்னா், பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோக்களில் பால்வினை மற்றும் ஹெச்ஐவி தொற்று குறித்தும் விழிப்புணா்வு ஸ்டிக்கா், பதாகைகள் ஒட்டியும், ஓட்டுநா்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கியும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில், மருத்துவா் காா்த்திகேயன், மருத்துவ ஆலோசகா் சுரேஷ், ஆய்வக நுட்புநா் கருணாநிதி, காசநோய் மூத்த சிகிச்சை மேற்பாா்வையாளா் ஜெகதீஷ், ஆட்டோ சங்கத் தலைவா் சரவணன், அரசு மருத்துவமனையின் சுகவாழ்வு மைய ஆலோசகா் கருப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.