FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

கைது - சித்திரிப்பு
பகிர்:

பென்னாகரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியைக் காட்டி மிரட்டிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே உள்ள பெரியதோட்டம்புதூா் பகுதியில் உதவி ஆய்வாளா் சக்திவேல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த அறிவழகன் (34) பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியைக் காட்டி மிரட்டி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளாா்.

இதைக் கண்ட போலீஸாா் அறிவழகனை கைது செய்தனா். மேலும் இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அறிவழகனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments