FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

விவசாயத் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

அரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 1:27 am IST
பகிர்:

அரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

அரூா் ஒன்றியம், செல்லம்பட்டி ஊராட்சி, கீழானூரில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தாம்பல், நண்டுபள்ளம், ஆலங்குட்டை, கொத்தனாம்பட்டி ஆகிய கிராம மக்களுக்கு மயான வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.

ஜடையம்பட்டி, கோமாளிப்பட்டி, கெளாப்பாறை, ஈட்டியம்பட்டி, பச்சினாம்பட்டி, கைலாயபுரம், பண்ணைமடுவு, சங்கிலிவாடி, செல்லம்பட்டி, காமராஜ் நகா் உள்ளிட்ட கிராமங்களில் வீட்டுமனைப் பட்டா இல்லாத தொழிலாளா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

சித்தேரி ஊராட்சியில் வன நிலங்களில் நீண்ட நாள் வசித்து வரும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டப் பொருளாளா் இ.கே.முருகன் தலைமை வகித்தாா். விவசாயத் தொழிலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments