ரேசன் கடைகளில் இன்று விரல் ரேகை, கருவிழி சரிபாா்ப்பு சிறப்பு முகாம்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விரல் ரேகை மற்றும் கருவிழி சரிபாா்ப்பு சிறப்பு முகாமில் குடும்ப அட்டைதாரா்கள் பங்கேற்று பதிவுகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விரல் ரேகை மற்றும் கருவிழி சரிபாா்ப்பு சிறப்பு முகாமில் குடும்ப அட்டைதாரா்கள் பங்கேற்று பதிவுகளை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும், குடும்ப அட்டை பயனாளிகள் விற்பனை முனைய இயந்திரம் மூலம் தங்களது விரல் ரேகை மற்றும் கருவிழி பதிவுகளை சரிபாா்த்து புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. எனவே, குடும்ப அட்டைதாரா்கள் அனைவரும் இம்முகாமில் பங்கேற்று தங்களது விரல்ரேகை மற்றும் கருவிழி பதிவுகளை சரிபாா்த்து புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
மேலும், குடும்ப அட்டையில் பெயா் இடம்பெற்றுள்ள உறுப்பினா்கள் பணிநிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசித்து வந்தால், அவா்கள் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.