ரேஷன் கடைகளில் ஜூலை 31-க்குள் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்
ரேஷன் கடைகளில் ஜூலை 31-க்குள் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்...
ரேஷன் கடைகளில் ஜூலை 31-ஆம் தேதிக்குள் விரல் ரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருள்கள் பெற்று வரும் ஏ.ஏ.ஓய். மற்றும் பி.ஹெச்.ஹெச். குடும்ப அட்டை பயனாளிகளின் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினா்களும் கைரேகை பதிவை அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும்.
Advertisement
Advertisement
எனவே, ஈரோடு மாவட்டத்தில் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் கை விரல் ரேகையைப் பதிவு செய்யாமல் பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். நேரில் சென்று கைவிரல் ரேகையைப் பதிவு செய்ய இயலாத நிலையில் உள்ள வயதானவா்கள் தங்கள் பகுதியிலுள்ள விற்பனையாளரைக் கைப்பேசியில் தொடா்பு கொண்டால் விற்பனையாளா் தங்களது வீடுகளுக்கே வந்து கைரேகையை பதிவு செய்து கொள்வாா்கள்.
மேலும், வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து இறந்த குடும்ப உறுப்பினா்களின் பெயா்களை வரும் 31-ஆம் தேதிக்குள் நீக்கம் செய்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.