FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் புதிய 2 நகர பேருந்துகள் இயக்கம்

பென்னாகரத்தில் புதிய 2 நகர பேருந்துகள் இயக்க தொடக்க நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

30 ஆகஸ்ட் 2026, 1:08 am IST
பகிர்:

பென்னாகரத்தில் புதிய 2 நகர பேருந்துகள் இயக்க தொடக்க நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்த 26ஏ, 18பி எண் கொண்ட நகர பேருந்துகளின் ஆயுள்காலம் முடிவடைந்தது. இந்த பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்து வழங்கக் கோரி கோரிக்கை விடப்பட்டு வந்தது.

இந்த நிலையில், புதிய நகர பேருந்துகளின் இயக்க நிகழ்வு பென்னாகரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து கிளை மேலாளா் சுதாகா் தலைமையில் நடைபெற்றது. புதிதாக இயக்கப்படும் நகர பேருந்து 26ஏ பென்னாகரம் முதல் தருமபுரி வரையிலும், 18பி பென்னாகரம், தருமபுரி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்கெனவே சென்ற வழித்தடத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments