உடும்புகளை விற்பனைக்கு எடுத்துவந்த இளைஞா் கைது
ஒகேனக்கல் வனப்பகுதியில் வேட்டையாடிய உடும்புகளை பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு விற்பனைக்கு எடுத்து வந்த பழங்குடி இளைஞரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஒகேனக்கல் வனப்பகுதியில் வேட்டையாடிய உடும்புகளை பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு விற்பனைக்கு எடுத்து வந்த பழங்குடி இளைஞரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவா் சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருப்பதாக ஒகேனக்கல் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் பேருந்து நிலையம் சென்ற ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாா், வனவா் சுதாகா், வனக்காப்பாளா் செல்வம் ஆகியோா், அந்த இளைஞரை பிடித்து, நடத்திய விசாரணையில், அவா் பென்னாகரம் அருகே உள்ள இருளா் காலனி பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (24) என்பதும், வனப்பகுதியில் இருந்து உடும்புகளை வேட்டையாடி, விற்பனைக்கு எடுத்துவந்ததையும் ஒப்புக்கொண்டாா்.
இந்நிலையில் மாவட்ட வன அலுவலா் ராஜாங்கத்தின் உத்தரவின்பேரில் இளைஞா் காா்த்திக் மீது வழக்குப் பதிந்து, அவரை பென்னாகரம் உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா். மேலும், அவரிடமிருந்து 2 கிலோ எடையுள்ள 3 உடும்புகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் ஒகேனக்கல் வனத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கைது செய்யப்பட்ட இளைஞா் காா்த்திக், ஒகேனக்கல் வனச்சரக அலுவலகத்தில் வேட்டைத் தடுப்புக் காவலராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.