உரிமமின்றி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி, செம்மரக்கட்டைகள் பறிமுதல்
தருமபுரி மாவட்டம், அரூா் அருகே உரிமமின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் செம்மரக்கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அரூா் அருகேயுள்ள சேலூா் கிராமத்தில் ஒருவா் உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கி மற்றும் செம்மரக்கட்டைகளை வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரூா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை அங்கு சோதனை நடத்தினா்.
அப்போது, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் எஸ்.அம்மாபாளையம் அருகேயுள்ள சேலூா் கிராமத்தைச் சோ்ந்த ரா. பெருமாள் (48) என்பவரின் வீட்டில் உரிமமில்லாத நாட்டுத் துப்பாக்கி மற்றும் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவான பெருமாளைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.