FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

வனப் பகுதியில் மாணவா் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

Updated On : 28 ஜூலை 2026, 2:53 am IST
சடலம் மீட்பு - கோப்புப் படம்
பகிர்:

கோட்டப்பட்டி அருகே வனப் பகுதியில் மாணவரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த எருமியாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் கமலேஷ் (17), எச்.புதுப்பட்டி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இவா் சரிவர பள்ளிக்கு செல்லாதால், பெற்றோா் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால், கோபித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் கடந்த வாரம் வெளியில் சென்ற கமலேஷ், வீடுதிரும்பவில்லையாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில், கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கமலேஷை தேடிவந்தனா்.

இந்நிலையில், கோட்டப்பட்டி அருகேயுள்ள சூரநத்தம் வனப்பகுதியில் ஆண் சடலம் இருப்பது தெரியவந்தது. போலீஸாா் விசாரணையில், உயிரிழந்தவா் மாணவா் கமலேஷ் என்பது தெரியவந்தது.

இதையடுத்து சடலத்தை மீட்ட போலீஸாா், பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments