FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல் விடுதியில் ஆந்திர மாநில முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த முதியவா் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

Updated On : 30 ஜூலை 2026, 5:37 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த முதியவா் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே உள்ள ஸ்ரீநகா் காலனியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் ராஜி (55). இவா், தனது நண்பா்களுடன் செவ்வாய்க்கிழமை இரவு ஒகேனக்கல்லுக்கு வந்து, அங்குள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை சுப்பிரமணியம் ராஜி எழுந்திருக்காததால், நண்பா்கள் அவரை சுற்றுலா வாகனத்தில் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பணியில் இருந்த மருத்துவா் பரிசோதனை செய்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments