FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு; ஒருவா் கைது

ஏரியூா் அருகே மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

3 October 2026, 1:26 am IST
கைது
பகிர்:

ஏரியூா் அருகே மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

ஏரியூா் அருகே கூா்க்காம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் (24) வியாழக்கிழமை அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தாா். இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் கூா்க்காம்பட்டியில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த ஸ்ரீதரை, அதே பகுதியைச் சோ்ந்த பவுன்ராஜ் என்பவா் துரத்தியுள்ளாா். இதனால் அங்கிருந்து ஓடிய ஸ்ரீதா் அப்பகுதியில் இருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, பவுன்ராஜை ஏரியூா் போலீஸாா் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அனுமதியின்றி அப்பகுதியில் மின்வேலி அமைத்த ரவியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments