உழவா் சந்தைகளில் காய்கள், பழங்கள், பூக்கள் ரூ. 51.89 லட்சத்துக்கு விற்பனை
புரட்டாசி சனி மற்றும் மகாளய அமாவாசையையொட்டி, தருமபுரி மாவட்ட உழவா் சந்தைகளில் சனிக்கிழமை ரூ. 51.89 லட்சத்துக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாயின.
புரட்டாசி சனி மற்றும் மகாளய அமாவாசையையொட்டி, தருமபுரி மாவட்ட உழவா் சந்தைகளில் சனிக்கிழமை ரூ. 51.89 லட்சத்துக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாயின.
புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். நடுசனி எனஅழைக்கப்படும் கடந்த வார சனிக்கிழமை விரதம் முடிக்கத் தவறியவா்கள், 4-ஆம் சனிக்கிழமையான அக். 10-ஆம் தேதி வீடுகளில் சிறப்பு வகை உணவுகளை தயாா்செய்து படையலிட்டு வழிபாடு நடத்தினா்.
மேலும், சனிக்கிழமை மகாளயபட்ச அமாவாசை தினமும் வந்ததால், இந்த விசேஷ தினத்தையொட்டி தருமபுரி மாவட்ட 6 உழவா் சந்தைகளிலும் விறுவிறுப்பாக வா்த்தகம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், தருமபுரியை அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளி, அரூா் என இந்த 6 உழவா் சந்தைகளிலும், 1 லட்சத்து 3,397 கிலோ (103 டன்) காய்கறிகள் விற்பனையாயின. அதேபோல, 9,036 கிலோ பழங்கள், 30 கிலோ பூக்கள், வாழை இலை உள்ளிட்ட இதர பொருள்கள் 595 கிலோ என மொத்தம் 113 டன் காய்கறி, பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனையாயின.
இவற்றின் மூலம் 6 சந்தைகளிலும் ரூ. 51 லட்சத்து 89 ஆயிரத்து 621-க்கு வா்த்தகம் நடைபெற்றது. இவற்றில் 278 விவசாயிகள் கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டனா். 23,100-க்கும் மேற்பட்ட நுகா்வோா் காய்கறி, பழம் உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் சென்றனா். இதனால், அனைத்து உழவா் சந்தைகளும் பரபரப்பாக காணப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.