FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

காவிரி ஆற்றில் மூழ்கிய வட மாநில இளைஞரை தேடும் பணி தீவிரம்

12 அக்டோபர் 2026, 3:07 am IST
நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மது போதையில் குளித்து கொண்டிருந்த வடமாநில இளைஞா் நீரில் மூழ்கிய நிலையில் அவரைத் தேடும் பணியில் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டுள்ளனா்.

திரிபுரா மாநிலம், சவுத் திரிபுரா மாதக் நகா் அருகே தசந்திபுரா பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் சௌத்ரி மகன் ஹரிடே சௌத்ரி (25). இவா், ஒசூா் சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், அவருடன் பணியாற்றும் நண்பா்கள் 25 பேருடன் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா்.

அப்போது, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான ஊட்டமலை அருகே செமலை காடு பகுதியில் மது போதையில் நண்பா்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக ஹரிடே சௌத்ரி நீரில் மூழ்கியுள்ளாா். அக்கம் பக்கத்தினா் ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் நீரில் மூழ்கிய வடமாநில இளைஞரை தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments