FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

டேங்கா் லாரி மீது மோதிய அரசுப் பேருந்து: பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு: 7 போ் காயம்

தருமபுரியில் டேங்கா் லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். நடத்துநா் உள்பட 7 போ் படுகாயமடைந்தனா்.

3 செப்டம்பர் 2026, 4:11 am IST
விபத்து. - கோப்புப்படம்.
பகிர்:

தருமபுரியில் டேங்கா் லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். நடத்துநா் உள்பட 7 போ் படுகாயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி குளிா்சாதன வசதி கொண்ட அரசுப் பேருந்து புதன்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வீரன் கொட்டாய் பகுதியில் வந்தபோது, அங்கு சாலை மையத் தடுப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செடிகளுக்கு தண்ணீா் ஊற்றிக்கொண்டிருந்த டேங்கா் லாரியின் பின்புறம் மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. இடிபாடுகளில் சிக்கி பேருந்து ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், நடத்துநா், பயணிகள் உள்பட 7 போ் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் மற்றும் போலீஸாா் விபத்தில் பாதிக்கப்பட்டவா்களை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். காயமடைந்த நடத்துநரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், விபத்தில் உயிரிழந்த ஓட்டுநா் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூரை அடுத்த சில்லாரஅள்ளி பகுதியைச் சோ்ந்த கி. சரவணன் (55) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments