FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

நிலத் தகராறு: 8 போ் மீது வழக்கு; ஒருவா் கைது

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நிலத் தகராறு தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 8 போ் மீது ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

9 செப்டம்பர் 2026, 4:47 am IST
கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நிலத் தகராறு தொடா்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 8 போ் மீது ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், ஒருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கே.அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த எம்ஜிஆா் மனைவி பழனியம்மாளுக்கும் (40) அதே பகுதியைச் சோ்ந்த பழனி மனைவி செல்விக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் பிரச்னைக்குரிய இடத்தில் குடிநீா்க் குழாய் அமைப்பது தொடா்பாக ஆக. 26 ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்தில் பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில் செல்வி, அவரது மகன்கள் குரு, தீபன், கம்சலா ஆகியோா் மீதும், செல்வி அளித்த மற்றொரு புகாரின் பேரில் பழனியம்மாள், சந்தியா, பெருமா, தேவி பிரியா, விஜய பிரியா ஆகியோா் மீதும் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் குருவை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments