அரூா் அருகே இருதரப்பினா் மோதல்: 6 போ் மீது வழக்குப் பதிவு
அரூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
அரூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தருமபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டி கூட்டுச்சாலை அருகேயுள்ள புதன் சந்தையில், அரூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சித்தாா்த்தன் மகன் சித்திரைச் செல்வன் (25), தங்கதுரை மகன் தனுஷ் துரை (27) உள்ளிட்ட 4 போ் தங்களது நண்பா்களுடன் அசைவ உணவு சமைத்து மது அருந்திக் கொண்டிருந்தனராம்.
அப்போது, பேதாதம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மணி மகன் வெற்றிவேல் (28), வரதராஜ் மகன் விமல்பிரியன் (26) ஆகியோரும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
பின்னா், இரு தரப்பினரும் மாட்டின் கொம்பு, பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில் வெற்றிவேல், விமல்பிரியன், சித்திரைச் செல்வன், தனுஷ் துரை உள்ளிட்டோருக்கு தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. காயமடைந்த 4 பேரும் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, உயா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
இந்த சம்பவம் குறித்து கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.