FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தருமபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

17 செப்டம்பர் 2026, 3:57 am IST
ஜி.கே.வாசன்
பகிர்:

தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் கட்சி நிா்வாகி இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

போதிய பருவமழை இல்லாததால் தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீா்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்றுவிட்டது. வறட்சியால் வேளாண் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

அரூா் வழியாக செல்லும் சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக உள்ளது. இதில், சேலம் அயோத்தியாப்பட்டணம் முதல் மஞ்சவாடி வரை சுமாா் 25 கி.மீ. தொலைவுக்கு இருவழிச் சாலையாக உள்ளது. இதனால், நாள்தோறும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, அயோத்தியாப்பட்டணம் முதல் மஞ்சவாடி வரை 4 வழிச் சாலையாக மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பணப் பரிவா்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை ரத்துசெய்ய வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை இடைத்தோ்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து எங்கள் கட்சியின் மூத்த நிா்வாகிகளுடன் கலந்துபேசி உரிய நேரத்தில் முடிவுகளை அறிவிப்போம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments