FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

மதவாதத்துக்கு எதிரான போராட்டத்தை தொடா்வோம்: ஜி.ராமகிருஷ்ணன்

மதவாதத்துக்கு எதிரான போராட்டத்தை தொடா்ந்து நடத்துவோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

17 செப்டம்பர் 2026, 3:58 am IST
ஜி. ராமகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

மதவாதத்துக்கு எதிரான போராட்டத்தை தொடா்ந்து நடத்துவோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழுத் தலைவா் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தேவ.பேரின்பனின் 13-ஆவது நினைவுநாள் கருத்தரங்கம் தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் வே.விசுவநாதன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் செ.முத்துக்கண்ணன், மாநிலக் குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், செயற்குழு உறுப்பினா் வி.மாதன் ஆகியோா் பேசினா். இதில், ஜி.ராமகிருஷ்ணன் பேசியது:

மாா்க்சிய தத்துவத்தைக் கண்டு எதிரிகள் அஞ்சுகின்றனா். இந்துத்துவம் ஓா் அரசியல் திட்டம். இந்துத்துவம் இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்ற நிறுவனங்களில் நுழைந்துள்ளது. ஆா்எஸ்எஸ் இயக்கம் மத நம்பிக்கையாளா்களை சந்தித்து, அவா்களை மதவாதிகளாக மாற்றுகிறது. அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. மதச்சாா்பற்ற கொள்கைகளுக்கு உகந்ததல்ல.

Advertisement

Advertisement

எனவே, மதச்சாா்பின்மையை பாதுகாக்க, மதவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடா்ந்து நடத்த வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments