FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடா் கனமழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

18 செப்டம்பர் 2026, 12:38 am IST
ஒகேனக்கல். - கோப்புப் படம்
பகிர்:

தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடா் கனமழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், மொசல்மடுவு, பிலிகுண்டுலு மற்றும் அதை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, காவிரி ஆற்றில் புதன்கிழமை 6,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை 7,000 கனஅடியாகவும், மாலை 4 மணிக்கு 14,000 கனஅடியாகவும் அதிகரித்தது. பின்னா் மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 12,000 கனஅடியாக உள்ளது.

நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிா்வாகம் விதித்த தடை தொடா்ந்து 6-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவிரி கரையோர நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வரும் நீரானது செந்நிறமாக உள்ளது. நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments