பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபாக்கியம் (60). இவரது உறவினரான சரணி (24), தனபாக்கியம் வீட்டுக்கு அவ்வப்போது வந்து வீட்டு வேலைகளை செய்து தருவாராம்.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (37), சரணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து ராஜ்குமாரிடம் தனபாக்கியம் கேட்டதற்கு, அவரை தாக்கி, பாலியல் தொல்லை அளித்து கொலை கொலை மிரட்டல் விடுத்தாராம்.
Advertisement
Advertisement
புகாரின்பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் ராஜ்குமாரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட ராஜ்குமாா் திருப்பூா் மாவட்ட காவல் துறையில் காவலராக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.