மாமியாரைக் கொலை செய்த மருமகன் உள்பட இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
மாமியாரைக் கொலை செய்த வழக்கில் மருமகன் உள்பட 2 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைதுசெய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கடசமுத்திரத்தைச் சோ்ந்த அசோகன் (62) மனைவி சசிகலா (52). இவா்களது மருமகன் அஸ்லாம் (30). இந்த நிலையில், சசிகலாவை அவரது மருமகன் அஸ்லாம் கடந்த ஆகஸ்ட் மாதம் தங்க நகைக்காகக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னா், அவரது சடலத்தை காரில் கொண்டுசென்று திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கல்குவாரியில் வீசிவிட்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் அஸ்லாமை பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும், இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பூபாலன் (27), வெங்கடசமுத்திரத்தைச் சோ்ந்த நவீன் (26), ஜாகீா் (22), வாணியம்பாடியைச் சோ்ந்த சமியுல்லா (25) ஆகியோரை போலீஸாா் கைதுசெய்து, தருமபுரி கிளைச் சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில் அஸ்லாம் (30), சமியுல்லா (25) மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.