தொழிலாளி வீட்டில் திருட்டு
தருமபுரியில் தொழிலாளி வீட்டில் நகை மற்றும் கையடக்க கணினியை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், சவுளுப்பட்டியைச் சோ்ந்தவா் மு. சம்பத் (55). எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறாா். இவா் தனது தங்கை இல்ல திருமண விழாவையொட்டி கடந்த 16 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றுவிட்டாா்.
மறுநாள் 17 ஆம் தேதி பிற்பகலில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, 1 பவுன் தங்கத் தோடுகள், கையடக்க கணினி (டேப்) உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.