FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தருமபுரி

போக்ஸோ வழக்கு: கைது செய்யப்பட்ட ஆசிரியா் பணியிடை நீக்கம்

தருமபுரியில் மாணவிக்கு குறுந்தகவல் அனுப்பியதாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்

53 வினாடிகள் முன்பு
பகிர்:

தருமபுரியில் மாணவிக்கு குறுந்தகவல் அனுப்பியதாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்

தருமபுரி மாவட்டம், பாலவாடி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவா் தங்கவேல் (48). இவா் மாணவி ஒருவரின் கைப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது. அதன்பேரில், பென்னாகரம் மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி, போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் அவரை அண்மையில் கைது செய்தனா்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து ஆசிரியா் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments