FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கந்திகுப்பத்தில் பகுதி நேர நியாய விலைக் கடை திறப்பு

பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கந்திகுப்பத்தில் 912 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறும் வகையில் பகுதி நேர நியாய

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கந்திகுப்பத்தில் 912 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறும் வகையில் பகுதி நேர நியாய விலைக் கடையை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி புதன்கிழமை திறந்து வைத்தார்.
கந்திகுப்பத்தில் உள்ள 1,132 குடும்ப அட்டைதாரர்களில் பலர் தங்களது அத்தியாவசியப் பொருள்களை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து அங்குள்ள நியாய விலைக் கடையில் வாங்கி வந்தனர். இதனால், ஏற்படும் விபத்தால் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்லாத வகையில் புதிய நியாய விலைக் கடையை திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, 912 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், பகுதி நேர நியாய விலைக் கடையை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி திறந்து வைத்து பேசியது: இந்த நியாய விலைக் கடையானது மக்களின் வேண்டுதலுக்கு ஏற்ப திறக்கப்பட்டுள்ளது. பழைய கடையானது வாரத்துக்கு இரண்டு நாள்கள் செயல்படும். கந்திகுப்பத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பெரிய ஏரியின் கால்வாய் விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.  
இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். கே.அசோக்குமார் எம்.பி, சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள் செல்வகுமார், ராதாகிருஷ்ணன், பர்கூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் 15 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments