FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

படப்பள்ளி ஸ்ரீதிம்மராய பெருமாள் கோயில் மஹா கும்பாபிஷேக விழா

ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீதிம்மராய பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீதிம்மராய பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் யஜநாம சங்கல்பம், ஆச்சார்யவர்ணம், புண்யாஹவாசனம், பகவத்  பிரார்த்தனை, வாஸ்து சாந்தி, அக்னிபிரதிஷ்டை, சாற்றுமறை பிரசாத விநியோகங்கள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு புண்யாஹவசனம், அக்னி ஆராதனை, கும்பாரதனம், மஹாசாந்தி, விசேஷ ஹோமங்கள், அஷ்டபந்தனம் சாற்றுதல், பூர்ணாஹுதி, சாற்றுமறை நடைபெற்றது. மாலை 4 மணியளவில் அதிவாஸ்த்ரய ஹோமம், பிம்ப வாஸ்து, பிரதான ஹோமங்கள் நடைபெற்றன.
புதன்கிழமை காலை 5 மணியளவில் புண்யாஹசனம், கோ பூஜை, அக்னி பூஜை, ததுக்த ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி, கலசம் புறப்பாடு, விமான சம்ப்ரோஷணம், மூலவர் சம்ப்ரோஷணம் பிரம்ம கோஷம், சாற்றுமறை, தீர்த்த பிரசாத விநியோகம் நடைபெற்றது. 
காலை 10 மணிக்குமேல் 10.45-க்குள் விருச்சிக லக்கினத்தில் மஹா சம்ப்ரோஷணம், கும்பாபிஷேக பெருவிழா வேத ஆகம திருமுறைகள்படி நடைபெற்றது.
திருக்கோவிலூர் ஸ்ரீத்ரிவிக்ரம சுவாமி சர்வ சாதகம் கண்ணன் பட்டாச்சார் புனித தீர்த்தம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா பி.சி.சென்னையன், படப்பள்ளி, பட்டகானூர், பெருமாள்குப்பம் கிராமங்களை சேர்ந்த யாதவர், 24 மனை தெலுங்கு செட்டியார்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments