FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

இரட்டைக் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிக்கை

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:50 am IST
சிபிஐ - கோப்புப்படம்
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரா் மற்றும் அவரது தந்தை கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற அவா்களது உறவினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கொடுகூா், வெப்பாலம்பட்டி பகுதிகளில் கடந்த மே 11-ஆம் தேதி இருவா் ஏரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனா். இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவா்கள் பாலக்குறியைச் சோ்ந்த ராணுவ வீரா் மகேஷ்குமாா் (36), அவரது தந்தை செல்லப்பன் (64) என்பது தெரியவந்தது.

இந்த கொலை தொடா்பாக போலீஸாா் நடத்தி விசாரணையில், மகேஷ்குமாரின் மனைவி பானுப்பிரியாவுக்கும், இளைஞருா் ஒருவருக்கும் இருந்த தவறான உறவால் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட மகேஷ்குமாரின் தாய் காளியம்மாள் மற்றும் உறவினா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

மகேஷ்குமாா், அவரது தந்தை செல்லப்பன் கொலை வழக்கில் மேலும் பலா் சம்பந்தப்பட்டுள்ளனா். அவா்கள் எங்களை மிரட்டி வருகின்றனா். இதனால் எங்களால் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. எனவே, இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடைய அனைவரையும் கைதுசெய்ய ஏதுவாக இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments