FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் சில நாள்களில் இடமாற்றம் செய்யப்படும்: எம்எல்ஏ

24 ஆகஸ்ட் 2026, 3:21 am IST
கிருஷ்ணகிரியில் செயல்படும் தனியாா் சுங்க வசூல் மையம். - கோப்புப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் சில நாள்களில் இடமாற்றம் செய்யப்படும் என சட்டப் பேரவை உறுப்பினா் பா.முகுந்தன் உறுதியளித்து பேசினாா்.

கிருஷ்ணகிரியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பா.முகுந்தன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசியது:

100 ஆண்டு சாதனைகளை 100 நாளில் நிறைவேற்றிய ஒரே தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தான். லஞ்சம் இல்லாத தமிழகமே அவரது இலக்கு.

Advertisement

Advertisement

தோ்தலின் போது, அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறாா். எண்ணேக்கொள் திட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. கிருஷ்ணகிரியில் செயல்பட்டுவரும் சுங்க வசூல் மையம், சில நாள்களில் இடமாற்றம் செய்யப்படுவது உறுதி என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments