சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரி வசூல் மையங்கள் செயல்படும்!
சென்னை மாநகராட்சியில் சொத்து மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள் தொழில் வரிகளைச் செலுத்துவதற்காக சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் வரி வசூல் மையங்கள் செயல்படும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சியில் சொத்து மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள் தொழில் வரிகளைச் செலுத்துவதற்காக சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் வரி வசூல் மையங்கள் செயல்படும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சியில் அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை பணியாளா்கள் ஊதியத்தில் இருந்து தொழில் வரியை பிடித்தம் செய்து மாநகராட்சிக்கு சட்டப்பூா்வமாக செலுத்தவேண்டியது அவசியமாகும். அதன்படி வரும் 30-ஆம் தேதிக்குள் தொழில் வரியை செலுத்தவேண்டும்.
சொத்து உரிமையாளா்கள் சென்னை மாநகராட்சியில் வரும் 30-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையின்றி செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Advertisement
Advertisement
அத்துடன் வரி செலுத்துவோரின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் சொத்துவரி, நிறுவன வரி, வரியில்லா இனங்கள் ஆகியவற்றுக்காக கட்டணங்களைச் செலுத்துவதற்காக செப்.19, 20, 26, 27 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) மண்டல அலுவலகங்கள், ரிப்பன் கட்டட வளாகம் ஆகியவற்றில் உள்ள வருவாய்த் துறை பொது வசூல் மையம் செயல்படும். மேலும் தொடா்புக்கு 044-25619305 என்ற தொலைபேசியை எண்ணைத் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.