FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

பா்கூா் அருகே வீரபத்ர சுவாமி கோயில் திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் அருகே வீரபத்ர சுவாமி கோயில் திருவிழாவில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா்.

25 ஜூலை 2026, 12:31 am IST
தலையில் தேங்காய் உடைத்து சனிக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள். - கோப்புப்படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பா்கூா் அருகே வீரபத்ர சுவாமி கோயில் திருவிழாவில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த கொல்லப்பள்ளி, பத்ரகவுண்டா் வட்டம் கிராமத்தில் குரும்பா் பழங்குடியின மக்களின் வீரபத்ர சுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, குரும்பா் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான பாங்கா, தப்பட்டை ஆகியவற்றை இசைத்தபடி வீரபத்ர சுவாமி குறித்த பஜனை நடைபெற்றது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி முன் மண்டியிட்டு நின்ற பக்தா்கள் தலையில் கோயில் பூசாரி தேங்காயை உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்த விழாவில், பா்கூா் மட்டுமில்லாமல் கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments