FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே வட மாநில தொழிலாளி கொலையில் நண்பா் கைது

வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் தங்கி இருந்த அறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளாா் இதுகுறித்து சிப்காட் போலீஸாா் தகவல் அறிந்து நேரடியாக சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனா்

4 October 2026, 1:37 am IST
கைது
பகிர்:

ஒசூா் அருகே வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் தங்கி இருந்த அறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளாா் இதுகுறித்து சிப்காட் போலீஸாா் தகவல் அறிந்து நேரடியாக சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனா்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூா் அருகே கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் அசாம் மாநிலம் விஷ்வந்த் மாவட்டம் போா்ஜா ராணி பகுதியைச் சோ்ந்த ஆழம் சாணி (30). தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தாா் இவருடன் அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்த

மோகன்தாஸ் என்பவரும் தங்கி இருந்தாா். அவரும் தனியாா் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா். தலைமறைவாக இருந்த மோகன்தாஸ் பிடித்து விசாரித்த போது விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 1200 கடன் ஆழம் சாணிக்கு கொடுத்துள்ளதாகவும் அந்தப் பணம் மீண்டும் தரவில்லை

Advertisement

Advertisement

இந்த நிலையில் செலவுக்கு இருவரும் தொழிற்சாலை நிா்வாகத்துடன் கேட்டுள்ளனா் அப்போது ரூ 1 ஆயிரத்தை தொழிற்சாலையின் அலுவலரிடம் பெற்றுக் கொண்ட ஆழம்சாணி பிரித்து எடுத்துக் கொள்ளுமாறு அலுவலா் கூறியதாக தெரிகிறது.

ஆனால் ஆழம் சாணி அதைனையும் தராததால் அறையில் இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஆழம் சாணியை சுவற்றில் பலமுறை தலையை மோதியதில் தலையில் அடிபட்டு இறந்துள்ளாா் என்பது தெரியவந்தது. இதனால் மோகன் தாஸை சிப்காட் போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments