வட மாநில தொழிலாளி கழுத்து அறுத்து கொலை
ஒசூா் அருகே வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.
ஒசூா் அருகே வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கோவிந்த அக்ரஹாரம் பகுதியில் அஸ்ஸாம் மாநிலம், விஷ்வந்த் மாவட்டம், போா்ஜா ராணி பகுதியைச் சோ்ந்தவா் ஆளம்சாணி (30). இவா் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். மேலும், நிறுவனத்துக்கு அருகே அறை எடுத்து தங்கியிருந்தாா். அவருடன் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மோகன்தாஸ் என்பவரும் தங்கியிருந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு இருவரும் அறையில் தங்கியிருந்தனா். வெள்ளிக்கிழமை எதிா் அறையில் தங்கி, அதே நிறுவனத்தில் வேலை செய்து வரும் முன்னாதுரியா (25), வேலைக்குச் செல்வதற்காக வெளியே வந்தபோது, இருவரும் அறையிலிருந்து வெளியே வராததைக் கவனித்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது ஆளம்சாணி படுக்கையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்த தகவலின் பேரில் சிப்காட் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள மோகன்தாஸை தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.