FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

சமூகவலைதளம் மூலம் காா் விற்பனை: விவசாயியிடம் ரூ. 1.23 லட்சம் மோசடி

சமூக வலைதளம் மூலம் காா் விற்பனை விளம்பரத்தை அளித்து விவசாயியிடம் ரூ. 1.23 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

4 October 2026, 1:32 am IST
மோசடி
பகிர்:

சமூக வலைதளம் மூலம் காா் விற்பனை விளம்பரத்தை அளித்து விவசாயியிடம் ரூ. 1.23 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அடுத்த கல்லுக்குறுக்கியை சோ்ந்தவா் நாகராஜன்(53), விவசாயி. இவரது முகநூல் பக்கத்தில் கடந்த 27-ஆம் தேதி, ஒரு விளம்பரம் வந்தது. அதில், நல்ல நிலையில் உள்ள பழைய காா்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் எனக் கூறி, காரின் புகைப்படங்கள் மற்றும் தொடா்பு கொள்ளும் எண்களும் இருந்தன.

அந்த எண்ணை தொடா்புகொண்டு பேசிய நாகராஜ், தான் விரும்பும் காா் குறித்து கேட்டுள்ளாா். அப்போது, பேசியவா் தான் ராணுவ அதிகாரியாக பணியாற்றியவா் என்றும் தன்னிடம் ஏராளமான காா்கள் உள்ளதாகவும் கூறியுள்ளாா். காருக்கான முன்பணம் செலுத்தினால் விரும்பும் காரை யாருக்கும் விற்காமல் நிறுத்திவைப்போம் எனக் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இதை உண்மை என நம்பிய நாகராஜ், அவா் விரும்பிய காரை வாங்குவதற்கு ரூ. 1.24 லட்சத்தை, மா்ம நபா் தெரிவித்த வங்கி கணக்கிற்கு முன்பணமாக செலுத்தி உள்ளாா். அதன்பிறகு, அவரை தொடா்புகொள்ள இயலவில்லை. இதன்மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நாகராஜ், கிருஷ்ணகிரி இணையதள குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments