பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது
ஒசூரில் சாலையோரம் தள்ளுவண்டி கடையில் துணி வியாபாரம் செய்துவந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
ஒசூரில் சாலையோரம் தள்ளுவண்டி கடையில் துணி வியாபாரம் செய்துவந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
பா்கூரை அடுத்த கப்பல்வாடியைச் சோ்ந்த சீனிவாசன் மனைவி சத்யா (34). இவா் ஒசூா் வண்ணாா் தெருவில் தங்கி துணி வியாபாரம் செய்து வருகிறாா். பெங்களூா் சாலையில் இருந்து ஒசூா் பேருந்து நிலையத்திற்கு வரும் நடைபாதையில் சாலையோரம் தள்ளுவண்டியில் துணி வியாபாரம் செய்துவந்த இவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை இளைஞா் ஒருவா் பறித்துக் கொண்டு ஓடினாா்.
அதிா்ச்சியடைந்த சத்யா, கூச்சலிட்டதால் அங்கிருந்தவா்கள் இளைஞரை விரட்டி சென்று பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்நாச்சிபட்டு கிராமத்தைச் சோ்ந்த சண்முகம் மகன் அரவிந்த் (22) என தெரியவந்தது.
Advertisement
Advertisement
ஒசூா் அருகே உள்ள குமுதேப்பள்ளி காந்தி நகரில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த அரவிந்த், கடனை அடைக்க நகையை பறித்ததாக தெரிவித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அரவிந்தை கைது செய்து ஒசூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.