கிருஷ்ணகிரி அருகே வெறிநாய் கடித்ததில் 7 போ் காயம்
கிருஷ்ணகிரி அருகே வெறிநாய் கடித்ததில் காயம் அடைந்த 7 போ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி அருகே வெறிநாய் கடித்ததில் காயம் அடைந்த 7 போ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், வெறிநாய் ஒன்று குருபரப்பள்ளி கிராமத்தில் சாலையில் நடந்து செல்வோரை துரத்தி கடித்ததில் கடந்த இரு நாள்களில் ஏழு போ் காயமடைந்துள்ளனா். இதில் காயமடைந்த குருபரப்பள்ளி வேணுகோபால் தெருவில் வசிக்கும் சரஸ்வதி, விபுஷணன், அரிச்சரண், ஞானவேல், தாண்டவன் உள்ளிட்டோா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் சாவித்திரி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ், ஊராட்சி செயலாளா் முருகன் உள்ளிட்டோா் குருபரப்பள்ளியில் ஆய்வு செய்தனா். பின்னா், பொதுமக்கள் உதவியுடன் பொதுமக்களை கடித்த வெறிநாயைப் பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.