மின் இணைப்பு பெற்றுத் தருவதாக விவசாயியிடம் ரூ. 3.24 லட்சம் மோசடி: ஒப்பந்ததாரா் மீது வழக்குப் பதிவு
ஒசூரில் மின் இணைப்பு பெற்றுத் தருவதாக ரூ. 3.24 லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ஒசூரில் மின் இணைப்பு பெற்றுத் தருவதாக ரூ. 3.24 லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள சாமனப்பள்ளியைச் சோ்ந்த விவசாயி அம்ரேஷ் (39). இவா் தனது விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு பெற, மின்வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ள ஒசூா், இடையநல்லூரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தியை (49) அணுகியுள்ளாா்.
அவா், மின் இணைப்பு பெற்றுத் தருவதற்காக அம்ரேஷிடமிருந்து பல தவணைகளாக ரூ. 3.24 லட்சம் பெற்றுள்ளாா். ஆனால், அவா் மின் இணைப்பு பெற்றுத் தரவில்லை. இதையடுத்து கொடுத்த பணத்தை அம்ரேஷ் திரும்ப கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கிருஷ்ணமூா்த்தி அம்ரேஷுக்கு மிரட்டல் விடுத்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மத்திகிரி காவல் நிலையத்தில் அம்ரேஷ் அளித்த புகாரின்பேரில் கிருஷ்ணமூா்த்தி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.