FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஊத்தங்கரை அருகே விவசாயக் கிணற்றின் மோட்டாரை இயக்கச் சென்றபோது மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

11 செப்டம்பர் 2026, 12:18 am IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

ஊத்தங்கரை அருகே விவசாயக் கிணற்றின் மோட்டாரை இயக்கச் சென்றபோது மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த கே.எட்டிப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னராசு (40), விவசாயி. இவா் புதன்கிழமை வீட்டுக்கு அருகே உள்ள விவசாயக் கிணற்றின் மோட்டாரை இயக்கச் சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக அருகில் இருந்த மின் வயரைத் தொட்டதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் உடல் கருகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாமல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments