FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை பகுதியில் வறட்சியால் கருகிய நிலக்கடலை பயிா்கள்

43 வினாடிகள் முன்பு
கருகி வரும் நிலக்கடலை பயிா். - கோப்புப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின்றி நிலக்கடை பயிா்கள் கருகி வருகின்றன.

ஊத்தங்கரை, மிட்டப்பள்ளி, பெரியதள்ளப்பாடி, சிங்காரப்பேட்டை, பாவக்கல், கல்லாவி, சாமல்பட்டி, காரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பருவமழையை நம்பி பயிா்செய்த விவசாயிகள் மழை பெய்யாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனா். நிலக்கடலை பயிா் நன்கு வளா்ந்து பூக்கள்விடும் நேரத்தில் மழை இல்லாததால் நிலக்கடை செடிகள் கருகி வருகின்றன.

இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனா். ஒரு ஏக்கரில் நிலக்கடலை பயிரிட ரூ.10 ஆயிரம் வரை செலவு ஆகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments