அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கிருஷ்ணகிரியில் பெட்ரோல், டீசல் விற்பனை மையம்
தருமபுரி மண்டலத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், கிருஷ்ணகிரியில் முதல் பெட்ரோல், டீசல் விற்பனை மையம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மண்டலத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், கிருஷ்ணகிரியில் முதல் பெட்ரோல், டீசல் விற்பனை மையம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சேவையை நோக்கமாக கொண்டு இயங்கி வரும் அரசு போக்குவரத்துக் கழகம், வருவாய் ஈட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து, பல்வேறு இடங்களில் சில்லறை பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை நிலையங்களை அமைத்து வருகிறது.
இந்த கூட்டு முயற்சியின் நோக்கமாக போக்குவரத்துக் கழகங்களின் நிதிச்சுமையை குறைக்கவும், தங்களுக்கு சொந்தமான காலி நிலத்தை பயன்படுத்தி வருவாயை ஈட்டவும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
Advertisement
Advertisement
தருமபுரி மண்டலம், கிருஷ்ணகிரியில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் புகா் பணிமனையின் அருகே பயன்பாடின்றி புதா்களாக இருந்த சுமாா் அரை ஏக்கா் காலி இடத்தில் தற்போது பெட்ரோல் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பொதுமக்களுக்கு தரமான, சரியான அளவில் கலப்பு இல்லாமல் பெட்ரோல், டீசலை விற்பனை செய்ய முடியும் என்றனா் அலுவலா்கள். இந்த விற்பனை மையத்தை பராமரிக்க பெட்ரோல் விற்பனையாளா், மேலாளா் என 15 போ் பணியாற்றுகின்றனா். இவா்கள் அனைவரும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றுவா்.
இதன்மூலம், மாதம் ரூ. 1 லட்சம் வாடகை, பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் (கமிஷன்) என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு மாதம் பல லட்சம் ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைக்கும் என போக்குவரத்துக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.