ஒசூரில் வழக்குப் பணியாளா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
ஒசூரில் ‘சகி’ என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்குப் பணியாளா் பதவிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
ஒசூரில் ‘சகி’ என்ற ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்குப் பணியாளா் பதவிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வன்முறைவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக செயல்பட்டு வரும் ‘சகி’ என்ற ஒசூா் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வழக்குப் பணியாளா் பதவிக்கு சமூக பணியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகா் (அல்லது) மேலாண்மை வளா்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில், அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிா்வாகத்தில் ஓா் ஆண்டு முன் அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் ஓா் ஆண்டு அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாள்களிலும் 24 மணிநேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும். ஒப்பந்த அடிப்படையில் மாத ஊதியம் ரூ. 18,800 ஆகும். விரும்பும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 25.09.2026 மாலை 5 மணிக்குள் அறை எண் 21, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.