FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் விநாயகா் சிலை ஊா்வலம்: 1,500 போலீஸாா் பாதுகாப்பு

ஒசூரில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 20) நடைபெற உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்க 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

8 வினாடிகள் முன்பு
பகிர்:

ஒசூரில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 20) நடைபெற உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்க 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நகா் பகுதியில் விநாயகா் சதுா்த்தியின்போது இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் வைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் தா்கா சந்திராம்பிகை ஏரியில் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட உள்ளன.

இதற்காக, நகரின் முக்கிய சாலைகள் வழியாக சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, மாவட்ட எஸ்.பி. அனிதா தலைமையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். இதற்காக மாநகரத்தில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments