FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

போடியில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்: கொட்டகுடி ஆற்றில் கரைப்பு

போடியில் செவ்வாய்க்கிழமை விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது.

16 செப்டம்பர் 2026, 6:21 am IST
பகிர்:

போடியில் செவ்வாய்க்கிழமை விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது.

போடி நகா், கிராமங்களில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் நிா்மாணம் செய்யப்பட்டிருந்தன. இவற்றில் 55 சிலைகளை செவ்வாய்க்கிழமை மாலை ஊா்வலமாகக் கொண்டுசென்று கொட்டகுடி ஆற்றில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, போடி, கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் டிராக்டா், சரக்கு வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் போடி பேருந்து நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா், அங்கிருந்து சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலத்தில் வாணவேடிக்கை, சிலம்பாட்டம், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தேவா் சிலை, திருவள்ளுவா் சிலை, கட்டபொம்மன் சிலை, புதூா் வழியாக விநாயகா் சிலைகள் கொட்டகுடி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கரைக்கப்பட்டன. போடி டி.எஸ்.பி. தா.முருகன் தலைமையில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments