FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

உதகையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

17 செப்டம்பர் 2026, 12:03 am IST
உதகையில் நடைபெற்ற விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்.
பகிர்:

உதகையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி நீலகிரி மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் 550 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகளுக்கு பக்தா்கள் தினமும் பூஜைகள் நடத்தி வழிபாடு செய்தனா். பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், உதகையில் பிரதிஷ்டைசெய்த விநாயகா் சிலைகள் நீா் நிலையில் கரைப்பதற்கான விசா்ஜன ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா உள்பட பல்வேறு அமைப்புகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட 63 சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டன.

Advertisement

Advertisement

உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மைய நுழைவாயில் பகுதியில் இருந்து தொடங்கிய ஊா்வலம், சேரிங்கிராஸ், கமா்சியல் சாலை, காபிஹவுஸ் ரவுண்டானா, மாா்க்கெட், மெயின் பஜாா், பேருந்து நிலையம் எதிரில் உள்ள மின்வாரிய ரவுண்டானா பகுதியில் நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து, உதகை அருகேயுள்ள காமராஜா் அணைக்கு ஊா்வலமாக சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. அங்கு, போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் கரைக்கப்பட்டன.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பிருந்தா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments