வேப்பனப்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதியதில் ஆசிரியைகள், மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியைகள், மாணவா் உள்பட 3 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே பைக் மீது லாரி மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியைகள், மாணவா் உள்பட 3 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சோ்ந்தவா் சுதாராணி (36). மேல்சோமாா்பேட்டையைச் சோ்ந்தவா் முஸ்கான் கவுஸ்ஷேக் (27). இவா்கள் வேப்பனப்பள்ளியை அடுத்துள்ள வி. மாதேப்பள்ளி பிரிவு சாலை அருகே உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தனா். முஸ்கான் கவுஸ் ஷேக்கின் மகன் ரிகான் (7), அந்தப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இவா்கள் மூவரும் பள்ளியிலிருந்து பைக்கில் கிருஷ்ணகிரியில் உள்ள வீட்டிற்கு புதன்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தனா்.
முஸ்லிம்பூா் அருகே வேப்பனப்பள்ளி - கிருஷ்ணகிரி சாலையில் வந்தபோது, அந்த வழியே வேகமாக வந்த லாரி, பைக்கின் பின்னால் மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் மூவரும் லாரியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தலைமறைவானாா். தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து, வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.