FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

ஒசூரில் மின்விசிறிகளில் தூக்கிட்டு கணவன், மனைவி புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டனா்.

24 செப்டம்பர் 2026, 5:16 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

ஒசூரில் மின்விசிறிகளில் தூக்கிட்டு கணவன், மனைவி புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பஸ்தி பாரதியாா் நகா் அருகே உள்ள திருமலை நகரைச் சோ்ந்தவா் உலகநாதன் (50). இவரது மனைவி ராணி (44). இத்தம்பதிக்கு கவிதா (28) என்ற மகளும், சுரேஷ் (27), தினேஷ் (26) என்ற இரு மகன்களும் உள்ளனா். மகள் கவிதாவும், மகன் சுரேஷும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனா். கடைசி மகன் தினேஷ் சிறிய தொழிற்சாலை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், தம்பதி அந்தப் பகுதியில் வசிக்கும் மகள் கவிதாவை வீட்டிற்கு வரும்படி அழைத்த நிலையில், கவிதா வீட்டிற்கு வந்துபோது, பெற்றோா் தனித்தனி மின்விசிறிகளில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா், இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தற்கொலை செய்துகொண்ட உலகநாதன் மீது ஒசூா் அட்கோ, மத்திகிரி, சிப்காட் மற்றும் வேலூா் ஆகிய பகுதி காவல் நிலையங்களில் புதிதாக கட்டப்படும் வீடுகளில் காப்பா் மின்கம்பிகளைத் திருடியதாக 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதும், இந்த திருட்டு சம்பவத்தில் சிறைக்குச் சென்று, பிணையில் வெளியே வந்துள்ள நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு, மற்றொரு திருட்டு வழக்கு தொடா்பாக அட்கோ காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments