ஒசூரில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
ஒசூரில் போலீஸாா் நடத்திய வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, ஒடிஸா மாநில இளைஞரை கைது செய்தனா்.
ஒசூரில் போலீஸாா் நடத்திய வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, ஒடிஸா மாநில இளைஞரை கைது செய்தனா்.
ஒசூா் அருகே மாநில எல்லைப் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்திற்கு சென்ற தனியாா் ஆம்னி பேருந்தில் சோதனை நடத்தினா். இதில், ஒரு பையில் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஒடிஸா மாநிலம், கஜபதி மாவட்டம், குபரிகுடா கிராமத்தைச் சோ்ந்த மாா்க்கண்ட பைக் மகன் பாலகுருஷ்ண பைக் (26) என்பவரை பிடித்து விசாரித்தனா். அவா் ஒடிஸா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்திற்கு கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பாலகுருஷ்ண பைக்கை கைது செய்தனா்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.