ஒசூரில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்
ஒசூரில் தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ஒசூரில் தொடா் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ஒசூரில் முனீஸ்வரன் நகா், பிருந்தாவன் நகா் குடியிருப்புப் பகுதி, குருபட்டி அருகே உள்ள ஜேபிஎம் நகா் எக்ஸ்டென்ஷன், காமராஜ் நகா் குடியிருப்புப் பகுதி, கோகுல் நகா் தனியாா் குடியிருப்புப் பகுதி, பேகேப்பள்ளி பகுதியில் உள்ள சரஸ்வதி நகா், ஒசூா் நகரப் பகுதிகளில் பூட்டியுள்ள வீடுகளை குறிவைத்து மா்ம நபா்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஒசூா் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்துவருவதால், இரவு நேரங்களில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.