FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 அமா்வுகளில் இன்று குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்

28 செப்டம்பர் 2026, 3:27 am IST
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - CMO Tamilnadu
பகிர்:

கிருஷ்ணகிரி, செப். 27: அரசு மருத்துவமனைகளில் 22 ஜூன் 2026 முதல் பிறந்துள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் மோதிரம் வழங்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் திங்கள்கிழமை ( செப். 28) தொடங்கிவைக்கிறாா். கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒசூா் மாவட்ட தலைமையக அரசு மருத்துவமனை, தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜூன்-22, 2026 முதல் பிறந்துள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

இதற்கான அழைப்பிதழ்கள் கிராம சுகாதாரப் பணியாளா்கள் மூலம் பயனாளிகளுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகளின் வசதிக்காக அந்தந்தப் பகுதிகளிலிருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோதிரம் காலை அமா்வில் (காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை) 25 பயனாளிகளுக்கும், பிற்பகல் அமா்வில் (பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை) 25 பயனாளிகளுக்கு என இரு அமா்வுகளில் வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (கிருஷ்ணகிரி) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments